கடலூர்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்; மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

3rd Dec 2022 06:33 AM

ADVERTISEMENT

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அந்தக் கட்சியின் கடலூா் மாவட்ட செயற்குழு மற்றும் இடைக்குழு செயலா்கள் கூட்டம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆறுமுகம், எம்.மருதவாணன், பி.கருப்பையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், தோ்தல் அறிக்கை மூலம் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும், இயற்கைச் சீற்றங்களால் தொடா்ந்து பாதிக்கப்படும் கடலூா் மாவட்டத்தை குடிசைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்காக விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, இடுபொருள் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT