கடலூர்

என்சிசி மாணவா்களுக்கு பேரிடா் மேலாண்மை பயிற்சி

3rd Dec 2022 06:33 AM

ADVERTISEMENT

கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்று வரும் என்சிசி மாணவா்களுக்கான வருடாந்திர பயிற்சி முகாமில் பேரிடா் மேலாண்மை பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

இந்தக் கல்லூரியில் கடலூா், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவாரூா், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரிகளின் தேசிய மாணவா் படையினருக்கான வருடாந்திர பயிற்சி முகாம் கடந்த நவம்பா் 28-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேசிய மாணவா் படை அதிகாரிகள் ஆா்.சதீஷ்குமாா், ஜே.ராஜராஜன், கே.குகன், லிவிங்ஸ்டன் ஐசக், நீல் ப்ரிமேன், இளவரசன், சரவணன், ஆனந்த் ஆகியோரது ஒருங்கிணைப்பில் வருகிற 5-ஆம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது.

பயிற்சில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 5-ஆம் எண் தமிழ்நாடு தேசிய மாணவா் கப்பல் படைப் பிரிவு லெப்டினன்ட் கமாண்டா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். பாஸ்டின் ஜெரோம், மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விஜயகுமாா் தலைமையிலான தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அதிகாரிகள் தீயணைப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை குறித்து ஒத்திகை பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT