கடலூர்

தி.க. சாா்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

2nd Dec 2022 03:11 AM

ADVERTISEMENT

திராவிடா் கழகம் சாா்பில், ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் சிறை சென்றவா்களுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் அன்பு.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். தலைமைக் கழகப் பேச்சாளா்கள் பட்டுக்கோட்டை மணியரசன், யாழ் திலீபன், மாவட்டத் தலைவா் பேராசிரியா் பூ.சி.இளங்கோவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் சிதம்பரம் நகரத் தலைவா் குணசேகரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் கோ.நெடுமாறன், ஆறு.கலைச்செல்வன், கு.தென்னவன், பாளையங்கோட்டை பெரியண்ணசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிதம்பரம் ரா.பொய்யாமொழி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT