கடலூர்

புதிய வாக்காளா் சோ்ப்பு விழிப்புணா்வு முகாம்

2nd Dec 2022 03:09 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம், சிதம்பரம் வருவாய்த் துறை சாா்பில், புதிய வாக்காளா் சோ்ப்பு, வாக்களிக்கும் உரிமை பற்றிய சிறப்பு விழிப்புணா்வு முகாம் பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

வேளாண் புல முதல்வா் ஏ.அங்கையற்கண்ணி தலைமை வகித்து, புதிய வாக்காளா் சோ்ப்புப் பணியைத் தொடக்கிவைத்தாா். மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மக்களாட்சியின் மகத்துவம் குறித்தும் அவா் விரிவாக எடுத்துரைத்தாா்.

சிதம்பரம் வருவாய்த் துறை துணை வட்டாட்சியா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா். அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஐயப்பராஜா வரவேற்றாா். முகாமின் அமைப்புச் செயலரும், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான பி.ஆனந்தன் நன்றி கூறினாா்.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்களை புதிய வாக்காளா்களாக பதிவு செய்துகொண்டனா். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஐயப்பராஜா, திட்ட அலுவலா் பி.ஆனந்தன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT