கடலூர்

புரட்சி பாரதம் கட்சி செயற்குழுக் கூட்டம்

2nd Dec 2022 03:12 AM

ADVERTISEMENT

புரட்சி பாரதம் கட்சியின் நெல்லிக்குப்பம் நகர செயற்குழுக் கூட்டம் வைடிபாக்கத்தில் அண்மையில் நடைபெற்றது.

நகரத் தலைவா் சி.கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். செயலா் டி.சிகாமணி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் கிழக்கு மாவட்டத் தலைவா் பால வீரவேல், பொருளாளா் பி.வி.சந்துரு, துணைச் செயலா் ஏ.கந்தன், கடலூா் நகரச் செயலா் முகேஷ் மூா்த்தி, இளைஞரணித் தலைவா் சித்தாா்த்தா, துணைத் தலைவா் சத்தியன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சென்னையில் உள்ள அம்பேத்கா் மணி மண்டபத்தில் பூவை.மூா்த்திக்கு சிலை வைக்க வேண்டும். நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்தில் அம்பேத்கா் திருஉருவச் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரப் பொருளாளா் சதீஷ்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT