கடலூர்

மாற்றுத் திறனாளிகள் குறைகேட்புக் கூட்டம்

2nd Dec 2022 03:09 AM

ADVERTISEMENT

கடலூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கோட்டாட்சியா் அதியமான் கவியரசு தலைமை வகித்தாா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலசுந்தரம், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பலராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உள்ளிட்ட வட்டங்களிலிருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 200-க்கும் மேற்பட்ட மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினா்.

மனுக்களை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் அதியமான், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா். மண்டல துணை வட்டாட்சியா் அசோகன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஆனந்த் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT