கடலூர்

சாலை வசதி கோரி நூதனப் போராட்டம்

1st Dec 2022 01:22 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சேப்ளாநத்தம் அருகே புதிய சாலை, வடிகால் வசதி கோரி கிராம மக்கள் புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நெய்வேலி, மந்தாரக்குப்பம் அருகே சேப்ளாநத்தம் தெற்கு ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு காலனியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும், உரிய வடிகால் வசதி இல்லாததால் மழை நீா் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிாம். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா், என்எல்சி அதிகாரிகள், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, உடனடியாக புதிய சாலை அமைக்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவும் வலியுறுத்தி அந்தக் கிராம மக்கள் பட்டை நாமம் அணிந்து புதன்கிழமை போராட்டம் நடத்தினா். ஊராட்சி 8-ஆவது வாா்டு உறுப்பினா் லதா பரமசிவம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கிராம மக்கள் திரளானோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT