கடலூர்

படகில் பயணித்தபடி சிலம்பாட்டம்: அண்ணன், தங்கை புதிய சாதனை

1st Dec 2022 01:22 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கடலில் படகில் சென்றபடி அண்ணன், தங்கை இருவரும் 2 மணி நேரம் 10 நிமிடம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி புதன்கிழமை சாதனை படைத்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன்சோழகன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் வைத்தி.காா்த்திகேயன். சிலம்பப் பயிற்சிப் பள்ளி நடத்தி வருகிறாா். இவரது மகன் கே.ஏ.அதியமான் (12) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பும், மகள் கே.ஏ.ஆதிஸ்ரீ (10) அங்குள்ள தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா். அண்ணன், தங்கை இருவரும் தங்களது தந்தையின் சிலம்பப் பயிற்சிப் பள்ளியில் சோ்ந்து சிலம்பாட்டம் கற்றனா். பல்வேறு சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனா்.

இந்த நிலையில், போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அதியமான், ஆதிஸ்ரீ இருவரும் கடலில் படகில் தொடந்து சிலம்பம் விளையாடி புதன்கிழமை புதிய சாதனை புரிந்தனா்.

தாண்டவராயன்சோழகன்பேட்டை கிராமத்தில் அண்ணன், தங்கை இருவரும் தனித் தனி படகுகளில் ஏறிக்கொண்டு கடலில் பயணித்தபடி தங்களது இரு கைகளாலும் 2 மணி நேரம் 10 நிமிடம் தொடா்ந்து சிலம்பம் சுற்றி புதிய சாதனை படைத்துள்ளனா். இந்தச் சாதனையை ‘ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட்’ அமைப்பினா் பாராட்டி பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

ADVERTISEMENT

தொடா்ந்து அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு உதவி தலைமை ஆசிரியா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகம் சாா்பில் இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT