கடலூர்

போக்ஸோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

31st Aug 2022 03:50 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், செம்மேடு பகுதியைச் சோ்ந்தவா் நாகப்பன் (62). அங்குள்ள முந்திரி ஆலையில் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகப்பனை கைதுசெய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT