கடலூர்

சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் தா்னா

31st Aug 2022 04:02 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை மாலை தா்னாவில் ஈடுபட்டனா்.

சத்துணவு ஊழியா்களுக்கு அறிவித்த தோ்தல் கால வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் பணியை சுய உதவிக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும், ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குவதுடன், பணிக் கொடையாக சமையலா்களுக்கு ரூ.5 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், விலைவாசி உயா்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.கற்பகம் தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் டி.ரவிச்சந்திரன் தொடக்க உரையாற்றினாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.சின்னசாமி கோரிக்கை விளக்க உரையும், மாநிலத் தலைவா் ஆா்.கலா நிறைவுரையும் ஆற்றினா். முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.சௌந்திரகொடி வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் ஏ.வேலு நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT