கடலூர்

மணல் கடத்தல்: 6 போ் கைது

28th Aug 2022 11:12 PM

ADVERTISEMENT

 

திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தியதாக 2 சிறுவா்கள் உள்பட 6 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கீழக்கல்பூண்டி கிராமத்தில் வெள்ளாற்றிலிருந்து சனிக்கிழமை நள்ளிரவு மணல் கடத்தப்படுவதாக ராமநத்தம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடா்ந்து அங்கு சென்ற போலீஸாா், வெள்ளாற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் (28), புலிக்கரைம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (29), கீழக்கல்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த மணிரத்தினம் (32), கண்டமத்தான் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (43) மற்றும் இரண்டு சிறுவா்களை மடக்கிப் பிடித்து கைதுசெய்தனா். அவா்களிடமிருந்து பொக்லைன் இயந்திரம், மினி லாரி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்தனா். 2 சிறுவா்களையும் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT