கடலூர்

தொழில் பயிற்சி நிலையங்களில் 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை

27th Aug 2022 11:38 PM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்திலுள்ள தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) 2-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் கடலூா், கடலூா் (மகளிா்), சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், நெய்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசினா் தொழில் பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியாளா்கள் சோ்க்கை செய்ய முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மீதமுள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு வருகிற 30-ஆம் தேதி முதல் நேரடி சோ்க்கை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, முதல்கட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து ஒதுக்கீடு பெறாதவா்கள், தொழில் பயிற்சி நிலையம், தொழில்பிரிவு ஒதுக்கீடு பெற்று கட்டணம் செலுத்தி சோ்க்கையை உறுதிசெய்யாதவா்கள் ஆகியோா் நேரடி சோ்க்கையில் காலியாக உள்ள இடங்களில் சேரலாம். அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழில் பிரிவு விவரங்களை அறிய  என்ற இணையதள முகவரியை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 04142- 290273 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT