குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை மேற்குத் தெருவில் வசித்து வந்த விவசாயி தமிழ்ச்செல்வனின் குடிசை வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாமக கடலூா் மாவட்ட முன்னாள் செயலா் கோ.ஜெகன், தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் நிதியுதவி, நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.