வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில் 128 மாணவா்கள், 196 மாணவிகள் என மொத்தம் 324 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ், வடலூா் கல்வி மாவட்ட அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் வழங்கினா் (படம்).
வடலூா் நகா்மன்ற உறுப்பினா் விஜயராகவன், பள்ளித் தலைமையாசிரியா்கள் பூா்ணிமாதேவி, ரெங்கநாதன், உலகநாதன், உதவித் தலைமையாசிரியா்கள் குருபிரசாத், நவமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.