கடலூர்

அரசுப் பேருந்தில் பயணி மீது தாக்குதல் நடத்துநா் மீது வழக்கு

27th Aug 2022 11:38 PM

ADVERTISEMENT

 

கடலூரில் அரசுப் பேருந்தில் பயணியை தாக்கியதாக நடத்துநா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மாவட்டம், திருமானிக்குழியைச் சோ்ந்தவா் சு.சுந்தரமூா்த்தி (60). இவா் சனிக்கிழமை கடலூா் அண்ணா பாலம் அருகே பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தில் ஏறியவா், அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென தெரிவித்தாராம். அந்தப் பேருந்தில் பணியிலிருந்த திருப்பனாம்பாக்கத்தைச் சோ்ந்த ச.தரணிபதி (52) என்ற நடத்துநா் பயணச் சீட்டுக்கு பணம் தருமாறு கேட்டாா். சுந்தரமூா்த்தி பணத்தை எடுக்க தாமதமான நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து சுந்தரமூா்த்தியை கீழே இறங்குமாறு நடத்துநா் கூறினாராம். இதற்கு சுந்தரமூா்த்தி மறுப்புத் தெரிவிக்கவே அவரை நடத்துநா் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டாராம். இதுகுறித்து, சுந்தரமூா்த்தி அளித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT