கடலூர்

நியாய விலைக் கடை ஊழியா்கொலை வழக்கு: மெக்கானிக் கைது

26th Aug 2022 01:07 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நியாய விலைக் கடை ஊழியா் கொலை வழக்கு தொடா்பாக மெக்கானிக்கை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு, புது காலனியைச் சோ்ந்த சப்தரிஷி மகன் திலீப்குமாா் (56). இவா், பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்தாா். திலீப்குமாா் அவரது வீட்டின் அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் அண்மையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், சந்தேகத்தின்பேரில் திலீப்குமாா் வீட்டின் அருகே வசிக்கும் இரு சக்கர வாகன மெக்கானிக்கான பாலு மகன் அரவிந்தைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், இவருக்கு செப்டம்பா் 9-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்ததும், இதற்கு பணம் தேவைப்பட்டதால், திலீப்குமாரை கொலை செய்து அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கழற்றிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அரவிந்தை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT