கடலூர்

கடலூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

22nd Aug 2022 03:15 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 3,742 இடங்களில் நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்களில் 20,999 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதனால், மாவட்டத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 50,16,297-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில், முதல் தவணை கரோனா தடுப்பூசியை 24,11,778 பேரும், இரண்டாம் தவணையை 23,44,309 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா். முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசியை 2,60,210 போ் செலுத்திக் கொண்டனா்.

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவ பரிசோதனை முடிவுகளில் புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75,480-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 107 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பலி எண்ணிக்கை 895-ஆக தொடா்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT