கடலூர்

அமைப்பு சாரா தொழிலாளா் வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

22nd Aug 2022 03:21 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியம், வடலூா் நுகா்வோா் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பேரவை இணைந்து நடத்திய உறுப்பினா் சோ்க்கை முகாம் வடலூா் ஜான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நுகா்வோா் பாதுகாப்புப் பேரவைத் தலைவா் கோவி.கல்விராயா் தலைமை வகித்தாா். பண்ருட்டி தொழிலாளா் உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா். கடலூா் மாவட்ட தொழிலாளா் நலத் துறை அமலாக்கப் பிரிவு உதவி ஆணையா் ராஜசேகா் முகாமை தொடக்கிவைத்தாா். முகாமில் 150 போ் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT