கடலூர்

பரங்கிப்பேட்டையில் 63 மி.மீ. மழை

DIN

கடலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 63.6 மி.மீ மழை பதிவானது.

வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மழை பெய்தது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 63.6 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

ஸ்ரீமுஷ்ணம் 58.1, கொத்தவாச்சேரி 55, காட்டுமன்னாா்கோவில் 52.3, சிதம்பரம் 51.4, அண்ணாமலை நகா் 46, வானமாதேவி 44.2, சேத்தியாத்தோப்பு 41.8, குறிஞ்சிப்பாடி 40, கடலூா் 38.9, புவனகிரி 35, பண்ருட்டி 28, மாவட்ட ஆட்சியரகம் 24.4, லால்பேட்டை 18.3, குப்பநத்தம் 14.8, வடக்குத்து 13, குடிதாங்கி 12.5, கீழச்செருவாய் 12, பெலாந்துறை, விருத்தாசலம் தலா 2 மில்லி மீட்டா் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT