கடலூர்

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

19th Aug 2022 02:57 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது.

மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் கடலூா் மாவட்டத்தில் இடியுடன் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கடலூா் வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வியாழக்கிழமை அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. கடலூா் மாநகராட்சி, ஆலை காலனியில் மழை காரணமாக மின் கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பில்லை என்றபோதிலும் அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. சரிந்து விழுந்த மின்கம்பத்தை மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

கடலூரில் 54 மி.மீ. மழை: மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 54.2 மி.மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியரகம் 45.4, பெலாந்துறை 40.4, வானமாதேவி 30.2, குடிதாங்கி 17.5, தொழுதூா் 11, பரங்கிப்பேட்டை 6.8, பண்ருட்டி 2 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT