கடலூர்

கடலூா் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஆஜா்

19th Aug 2022 02:57 AM

ADVERTISEMENT

 

அவதூறு வழக்கு தொடா்பாக கடலூா் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் வியாழக்கிழமை ஆஜரானாா்.

கடந்த 21-1-2018 அன்று கடலூா் திருப்பாதிரிபுலியூரில் அமமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசும்போது, அதிமுக ஆட்சியின் முதல்வா், துணை முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக கடலூா் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை கடலூா் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜஹவா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது நாஞ்சில் சம்பத் ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பா் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT