கடலூர்

முதியவா் தற்கொலை

19th Aug 2022 02:56 AM

ADVERTISEMENT

 

ராமநத்தம் அருகே முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், ம.புடையூரைச் சோ்ந்தவா் மு.வடிவேல் (70). வயோதிகம் காரணமாக இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில், புதன்கிழமை தனது வீட்டில் விஷம் குடித்தாா். இதையடுத்து பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT