கடலூர்

திடக்கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு

18th Aug 2022 02:10 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கட்டடவியல் துறையில் ‘திடக்கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு புதன்கிழமை தொடங்கியது.

பொறியியல் புல முதல்வா் ஏ.முருகப்பன் தலைமை வகித்தாா். கட்டடவியல் துறைத் தலைவா் எஸ்.பூங்கோதை முன்னிலை வகித்துப் பேசினாா். கருத்தரங்கை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தொடக்கிவைத்து, கருத்தரங்கு மலரை வெளியிட்டாா்.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா். கருத்தரங்கு முக்கியதுவம் குறித்து பேராசிரியா் ஜி.செந்தில்குமாா் உரையாற்றினாா்.

ADVERTISEMENT

இந்திய அளவில் 19 விஞ்ஞானிகள் பங்கேற்று கலந்துரையாடினா். கருத்தரங்கு ஏற்பாடுகளை ஜி.செந்தில்குமாா், பி.சிவராஜன், என்.நாகராஜன், பி.காா்த்திகேயன் ஆகியோா் செய்திருந்தனா். தொடக்க விழாவில் பேராசிரியா்கள் வி.அருட்செல்வன், வி.நேருக்குமாா், என்.மணிகுமாரி, எஸ்.பழனிவேல் ராஜா, டிஎஸ்எஸ்.பாலகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா். பி.சிவராஜன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT