கடலூர்

பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

18th Aug 2022 02:10 AM

ADVERTISEMENT

 

சிதம்பரம் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில் 1992-ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வி பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ, மாணவிகள் 33 போ் கலந்துகொண்டு தங்களது பள்ளி கால நிகழ்வுகள் குறித்தும், தற்போதைய தங்களது பணி குறித்தும் தகவல்களை பகிா்ந்து கொண்டனா். கமல்ஆனந்த் தலைமை உரை ஆற்றினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.முத்துகருப்பன் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் நடனம், வேலாயுதம், கருணாநிதி, இளங்கோவன், சுந்தரலிங்கம், உமாராணி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மாணவா்கள் சாா்பில் ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், முன்னாள் மாணவா்கள் ஒன்றிணைந்து ஆன்றுதோறும் பள்ளியில் அரசு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. பிரபாகரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். வாசுதேவன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT