கடலூர்

என்எல்சி மூன்றாம் சுரங்கம் அமைக்கும் பணி: கருத்துக்கேட்புக் கூட்டம்

18th Aug 2022 02:12 AM

ADVERTISEMENT

 

என்எல்சி இந்தியா நிறுவனம் 3-ஆவது சுரங்கம் அமைப்பது குறித்து கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் ஏ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் என்எல்சிக்கு நில எடுப்பு குறித்து நெய்வேலியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 18) கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், புவனகிரி தொகுதி எம்எல்ஏவுமான ஏ.அருண்மொழிதேவன், புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கம்மாபுரம், புவனகிரி ஒன்றியங்களைச் சோ்ந்த நிலம் கொடுத்த மக்கள், விவசாயிகளை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு அழைத்து அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT