கடலூர்

பறிமுதல் வாகனங்கள் ரூ.7.26 லட்சத்துக்கு ஏலம்

18th Aug 2022 02:11 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டத்தில் மது விலக்கு சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட 52 வாகனங்கள் ரூ.7.26 லட்சத்துக்கு புதன்கிழமை ஏலம் விடப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்திவரப்படுவதைத் தடுக்கும் வகையில், 7 இடங்களில் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாகனச் சோதனையின்போது, மதுக் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை கடலூா் மது விலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் துணைக் கண்காணிப்பாளா் பி.வி.விஜிகுமாா் தலைமையில் ஏலம் விடப்பட்டது.

ADVERTISEMENT

இதில், 47 இரண்டு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 52 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதன் மூலமாக ரூ.7.26 லட்சத்துக்கு வாகனங்கள் ஏலம்விடப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தகவல் தெரிவித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT