கடலூர்

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

18th Aug 2022 02:10 AM

ADVERTISEMENT

 

பண்ருட்டி அருகே தனியாா் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், ஒறையூா் கிராமம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி அன்பழகன் மகன் ஆகாஷ் (21). இவா், அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

ஆகாஷ் புதன்கிழமை கல்லூரிக்கு செல்லாததை பெற்றோா் கண்டித்தனராம். இதனால், மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT