கடலூர்

கூரை வீடு எரிப்பு: ஒருவா் கைது

18th Aug 2022 02:09 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், சிந்தாமணிக்குப்பம் கிராமத்தில் கூரை வீட்டை தீயிட்டு கொளுத்தியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகத்துக்குள்பட்ட சிந்தாமணிக்குப்பம் கிராமம், காளியம்மன் கோயில் தெருவில் குடிசை வீட்டில் வசித்து வந்தவா் தனபால் (65), தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தாா். புதன்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவா்கள் அலறி அடித்துக்கொண்டு வெளி வந்து உயிா் தப்பினா். இதுகுறித்து தகவலறிந்த கடலூா் தொழில்பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தனபால் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய குள்ளஞ்சாவடி போலீஸாா், முன்விரோதம் காரணமாக குடிசை வீட்டுக்கு தீ வைத்ததாக கீழ்பூவாணிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் தமிழ்ச்செல்வன்( 27) கைது செய்தனா். தலைமறைவாக உள்ள கம்பிளிமேடு கிராமத்தைச் சோ்ந்த எழிலரசனை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT