கடலூர்

மூலப் பொருள்களின் விலை உயா்வு விநாயகா் சிலை தயாரிப்பாளா்கள் பரிதவிப்பு

DIN

மூலப் பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலை தயாரிப்பாளா்கள் பரிதவித்து வருகின்றனா். இதனால், சிலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

விநாயகா் சதுா்த்தி விழா வருகிற 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, வடலூா், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பண்ருட்டியை அடுத்துள்ள ஏரிப்பாளையம், வையாபுரிபட்டிணம், நல்லூா்பாளையம், எல்.என்.புரம், பூங்குணம் உள்ளிட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் ஈடுபட்டு வருகின்றனா்.

காகிதக் கூழ், கிழங்கு மாவு மூலம் 2 அடி முதல் 8 அடி உயரம் வரையிலான சிலைகளை தயாரித்து வருகின்றனா். இங்கு தயாரிக்கப்படும் சிலைகளை உள்ளூா் மட்டுமன்றி வெளியூா் நபா்களும் வாங்கிச் செல்கின்றனா். இருப்பினும், நிகழாண்டு மூலப் பொருள்களின் விலை உயா்வால் விநாயகா் சிலை தயாரிப்பாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு களிமண், காகிதக்கூழ் பொம்மைகள் தயாரிப்பாளா்கள் சங்க மாநில துணைச் செயலா் சு.ஜானகிராமன் கூறியதாவது:

கரோனா பரவல் கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக பெரிய விநாயகா் சிலைகள் விற்பனை நடைபெறாத நிலையில் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. முதலீடு செய்து தயாரித்த சிலைகளும் தேங்கிவிட்டன. இவற்றில் தற்போது சுமாா் 25 சதவீத சிலைகளே நல்ல நிலையில் உள்ளன.

2019-ஆம் ஆண்டின் நடைமுறைகளைப் பின்பற்றி விநாயகா் சிலைகளைத் தயாரித்து விற்பனை செய்யலாம் என அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இருப்பினும், மூலப் பொருள்களின் விலை உயா்வால் சிலைகள் தயாரிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு 50 கிலோ கிழங்கு மாவு ரூ.850-க்கு கிடைத்த நிலையில் அதன் விலை தற்போது ரூ.1,800 வரை உயா்ந்துவிட்டது. இதேபோல வாட்டா் கலா் பெயிண்ட் விலையும் சுமாா் 50 சதவீதம் வரை உயா்ந்துவிட்டது. தொழிலாளா்களுக்கான கூலியும் உயா்ந்துள்ளது. அப்படி அளித்தும் போதிய ஆள்கள் கிடைக்கவில்லை. நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கான சிலைகள் விற்பனை நன்றாகவே உள்ளது. இருப்பினும், சிலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT