கடலூர்

நடராஜா் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி

16th Aug 2022 03:57 AM

ADVERTISEMENT

நாட்டின் 76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் கோபுரத்தில் திங்கள்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக, கோயில் பொது தீட்சிதா்கள் அன்று காலை 6 மணியளவில் தேசியக் கொடியை வெள்ளித் தட்டில் வைத்து, சித் சபையில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூா்த்திக்கு அா்ச்சனை, தீபாராதனை செய்தனா்.

இதையடுத்து, மேள தாளத்துடன் கோயில் செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா் தலைமையில் பொது தீட்சிதா்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றினா். பக்தா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT