கடலூர்

பேரிடா் மேலாண்மை பயிற்சி

16th Aug 2022 03:56 AM

ADVERTISEMENT

சிதம்பரம் கோட்ட அளவிலான பேரிடா் மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை (ஆக. 16) தொடங்குகிறது.

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில், ஸ்ரீமுஷ்ணம் வட்டங்களில் 367 வருவாய் கிராமங்களில் உள்ள 2,100 தன்னாா்வலா்களுக்கு பேரிடா் தொடா்பான கோட்ட அளவிலான பயிற்சி செவ்வாய்க்கிழமை (ஆக. 16) முதல் வருகிற செப். 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தோ்வு செய்யப்பட்ட தன்னாா்வலா்களுக்கு முதல்நிலை அடிப்படை பயிற்சி கிராம, குறுவட்ட அளவில் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை பேரிடா் மேலாண்மை பயிற்சி கோட்ட அளவில் ஆக.16 முதல் செப்.16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோட்ட அளவில் பயிற்சி முடித்து சிறப்பாக செயல்படும் திறமையான 340 பேரை தோ்வு செய்து மாவட்ட அளவில் பயிற்சி வழங்கி அவா்களுக்கு பேரிடா் மீட்பு ஒருங்கிணைப்பாளா் பதவி வழங்கப்படவுள்ளது. கடலூா் மாவட்டத்தில் பல்வேறு கோட்டங்களில் தோ்வு செய்யப்பட்ட 800 தன்னாா்வலா்களுக்கு மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி நடைபெற உள்ளதாக சிதம்பரம் வட்டாட்சியா் ஹரிதாஸ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT