கடலூர்

சுதந்திர தின விழாவில் நூதன முறையில் கோரிக்கையை தெரிவித்த நகா்மன்ற உறுப்பினா்

16th Aug 2022 03:52 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகா்மன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகா்மன்ற உறுப்பினா் ஒருவா் தனது வாா்டு கோரிக்கைகளை ஒப்பாரியாக பாடினாா்.

விருத்தாசலம் நகா்மன்ற அலுவலக வளாகத்தில் அதன் தலைவா் சங்கவி தலைமையில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி கூறுவதற்காக அழைக்கப்பட்டனா். அப்போது, 6-ஆவது வாா்டு உறுப்பினரான குமாரி (பாமக), தனது வாா்டு தொடா்பாக நகராட்சியில் வைத்த எந்த கோரிக்கையும் நிறைவேறவில்லை என்பதை ஒப்பாரியாக பாடினாா்.

இதுகுறித்து குமாரி கூறியதாவது: எனது வாா்டில் இதுவரை எந்த வளா்ச்சிப் பணியும் நடைபெறவில்லை. இதுதொடா்பாக பலமுறை நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட்டும் பலனில்லை. சுதந்திர தினத்திலாவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோரிக்கைகளை ஒப்பாரியாக பாடினேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT