கடலூர்

சிறப்பாக பணிபுரிந்த அலுவலா்களுக்கு பாராட்டு

16th Aug 2022 03:54 AM

ADVERTISEMENT

கடலூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களை பறக்கவிட்டாா். தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசனுடன் இணைந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களது வாரிசுதாரா்களை ஆட்சியா் கௌரவித்தாா். மேலும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 139 அரசு அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா். பல்வேறு துறைகளின் சாா்பில் 65 பயனாளிகளுக்கு ரூ.26.75 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

விழாவில் வாண்டியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பத்ரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பாதிரிப்புலியூா் குளோபல் சிறப்பு பள்ளி, வேணுகோபாலபுரம் ஸ்ரீவரதம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலூா் ஓயாசீஸ் சிறப்பு பள்ளி, காரைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கோ.ஐயப்பன், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT