கடலூர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்

15th Aug 2022 10:04 AM

ADVERTISEMENT

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானிடம் வெள்ளி தாம்பாலத்தில்  தேசியக் கொடி வைத்து படைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்

பின்னர் கோயில் செயலாளர் சிஎஸ்எஸ் ஹேமசபேச தீட்சிதர் தலைமையில், பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் வலம் வந்து, பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT