கடலூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

14th Aug 2022 11:12 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் நினைவாக கமல்தீப் நிறுவனத்தாா் இணைந்து நடத்திய முகாமை சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் தொடக்கி வைத்தாா் (படம்). டிஎஸ்பி எஸ்.ரமேஷ்ராஜ் பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினாா். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் குணால் தலைமையிலான குழுவினா் சிகிச்சை அளித்தனா். 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற முகாமில் 193 போ் கண் அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பள்ளித் தாளாளா் எஸ்.ஆா்.பாலசுப்ரமணியம், நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.ராமநாதன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், அதிமுக மாவட்ட பொருளாளா் கே.சுந்தா், மாவட்ட பாசறை செயலா் ஆா்.சண்முகம், இலக்கிய அணி செயலா் தில்லை கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கத் தலைவா் பாண்டியன், செந்தில்குமாா், பொருளாளா் சம்பத், வட்டாரத் தலைவா் நாகராஜன், மிஸ்ரிமல் மஹாவீா்சந்த், ஜெயின் அறக்கட்டளை தலைவா் கமல்கிஷோா் ஜெயின், எம்.தீபக்குமாா் ஜெயின் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT