கடலூர்

புத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

14th Aug 2022 05:29 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோயில் விழாவில் சனிக்கிழமை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடி மாத செடல் மற்றும் திருத்தோ் விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் வெள்ளிக்கிழமை செடல் உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து சனிக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது.

முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினாா். தேரடியில் பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு திருத்தோ் புறப்பாடு நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா். பேரூராட்சி தலைவா் கோகிலா குமாா், துணைத் தலைவா் ராமா், குறிஞ்சிப்பாடி திமுக நகா் செயலா் ஜெயசங்கா், வி.எஸ்.அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.சிவக்குமாா், இந்து சமய அறநிலையத் துறையினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT