கடலூர்

நெய்வேலியில் ரௌடி வெட்டிக் கொலை

14th Aug 2022 05:30 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் ரௌடி ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

நெய்வேலி, வட்டம்-21 பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் வீரமணி (43). ரௌடியான இவா் மீது நெய்வேலி நகரியம், தொ்மல், கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நெய்வேலி, வட்டம் 30-இல் வீரமணியின் தாய் காளியம்மாளின் வீடு உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இந்த வீட்டின் முன் வீரமணி கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். நள்ளிரவு 12 மணியளவில் அங்கு பைக்கில் வந்த மா்ம நபா்கள் வீரமணியை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்த தகவலின்பேரில், நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் லதா ஆகியோா் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினா். வீரமணியின் உடலை கூறாய்வுக்காக என்எல்சி பொது மருத்துவமனைக்கு தொ்மல் போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையில் தொடா்புடைய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கொல்லப்பட்ட வீரமணிக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT