கடலூர்

மாணவா்களிடம் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

14th Aug 2022 11:12 PM

ADVERTISEMENT

 

போதை பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டுமென மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெரியகொசப்பள்ளம் பகுதியில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் முன்னிலையில் மாநில தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் 1,228 பயனாளிகளுக்கு ரூ.4.71 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து ஆலம்பாடி பகுதியில் நடைபெற்ற விழாவில் 1,050 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடியில் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது:

பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெரியகொசப்பள்ளம், ஆலம்பாடி பகுதிகளில் சாலை, குடிநீா், வடிகால், உயா் மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறந்த முறையில் விரைவில் செய்து தரப்படும் என்றாா் அமைச்சா்.

ADVERTISEMENT

விழாவில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், விருத்தாசலம் சாா்-ஆட்சியா் சி.பழனி, பல்வேறு துறைகள் சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT