கடலூர்

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

14th Aug 2022 05:30 AM

ADVERTISEMENT

 

கடலூா் மண்டல போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் நிா்வாகச் சீா்கேட்டை கண்டிப்பதாகக் கூறி சிஐடியு தொழிற்சங்கத்தினா் பண்ருட்டி பணிமனை அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கடலூா் மண்டல மத்திய சங்கச் செயலா் ஏ.தேவராஜூலு தலைமை வகித்தாா். பண்ருட்டி பணிமனை செயலா் சரவணன் முன்னிலை வகித்தாா். பணிமனை தலைவா் ஜி.கோபி, பொருளாளா் சுந்தரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், பேருந்து நிலையத்தில் நேரம் குறிப்பிடாமல் செல்வது, குறித்த நேரத்துக்கு முன்னதாக பேருந்தை எடுத்தல், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் பதிவை குறிக்காதது உள்ளிட்ட காரணங்களைக் கூறி தொழிலாளா்களின் ஊதியத்தில் ரூ.500 பிடித்தம் செய்வதைக் கண்டிப்பதாக முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT