கடலூர்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

14th Aug 2022 11:11 PM

ADVERTISEMENT

 

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) தி.பாலமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை முதல் தொடங்கிய காலாண்டுக்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தோ்வு அல்லது தோல்வி, அதற்கு மேலான கல்வித் தகுதியை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவை தொடா்ந்து புதுப்பித்து ஜூன் மாதத்துடன் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளை பொருத்தவரை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தைச் சோ்ந்தவா்கள் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவம் பெற விரும்புவோா் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

நிவா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 30-ஆம் தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT