கடலூர்

காட்டுமன்னாா்கோவிலில் பள்ளி, கோயில்களில் திருட்டு

14th Aug 2022 11:12 PM

ADVERTISEMENT

 

காட்டுமன்னாா்கோவில் அருகே பள்ளி, கோயில்களில் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ரெட்டியூா் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்த கடையில் சனிக்கிழமை இரவு விற்பனையாளா்கள் பணியை முடித்து கதவை பூட்டிச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மா்ம நபா்கள் மதுக் கடை கதவின் பூட்டை உடைக்க முயன்றனா். இந்த சப்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் கூச்சலிடவே மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இந்த நிலையில், ஷண்டன் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இரண்டு மடிக் கணினிகள், கணினி ஆகியவை திருடப்பட்டுள்ளது. மேலும், அருகே உள்ள செல்லியம்மன், கருப்புசாமி, வீரனாா், அய்யனாா் ஆகிய கோயில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணமும் திருடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக் கடையில் திருட முயன்றவா்களே இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன்குமாா், காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் ஏழுமலை ஆகியோா் திருட்டு நடைபெற்ற பள்ளி, கோயில்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT