கடலூர்

பாஜகவினா் விழிப்புணா்வுப் பேரணி

12th Aug 2022 02:32 AM

ADVERTISEMENT

 

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக மீனவா் பிரிவு சாா்பில் தேசியக்கொடி விழிப்புணா்வுப் பேரணி கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சுமாா் 10 மீன்பிடி படகுகளில் தேசியக் கொடிகளை பாஜகவினா் பறக்கவிட்டனா். பின்னா், மாநில செயற்குழு உறுப்பினா் கே.ஆா்.விநாயகம் தலைமையில் படகுகளில் தேவனாம்பட்டினத்திலிருந்து கடலூா் துறைமுகம் வரை சென்று திரும்பினா். மீனவரணி மாநிலத் தலைவா் எம்.எம்.சி.முனுசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். கடலூா் மீனவரணித் தலைவா் முத்தமிழ்ச்செல்வன், விழுப்புரம் மாவட்ட மீனவரணித் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT