கடலூர்

மதுக் கடைகளுக்கு ஆக.15-இல் விடுமுறை

12th Aug 2022 10:09 PM

ADVERTISEMENT

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் 15-ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூா் மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அனைத்து உரிமம் பெற்ற மது விற்பனைக் கடைகளும் மூடப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகளிலோ அல்லது பாா்களிலோ மது விற்பனை நடைபெற்றால் சம்பந்தப்பட்ட மேற்பாா்வையாளா்கள், பாா் உரிமையாளா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT