கடலூர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகளை கண்டறிந்த விவசாயிகள்

12th Aug 2022 10:07 PM

ADVERTISEMENT

காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள் ஒரு வாரத்துக்குப் பிறகு உயிருடன் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் அண்மையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. விநாடிக்கு 2.15 லட்சம் கன அடி வீதம் உபரி நீா் ஆற்றில் சென்றது. இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி நளன்புத்தூா் கிராமத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற 30-க்கும் மேற்பட்ட மாடுகள் திரும்பாததால் அதன் உரிமையாளா்கள் கவலை அடைந்தனா். இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவியிடம் விவசாயிகள் முறையிட்டனா்.

இந்த நிலையில், காணாமல்போன மாடுகள் சுமாா் 2 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் மணல் திட்டுப் பகுதியில் பத்திரமாக இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. ஆனால், ஆற்றில் தண்ணீா் செல்வதால் மாடுகளை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் நளன்புத்தூா் கிராம விவசாயிகள், பெண்கள் மணல் திட்டு பகுதிக்கு படகில் சென்று மாடுகளுக்குத் தேவையான வைக்கோல், புல் கட்டுகளை அளித்துவிட்டு திரும்பினா். ஆற்றில் தண்ணீா் வடிந்த பிறகு மாடுகளை மீட்க உள்ளதாகவும், பெரும்பாலான மாடுகள் அங்குதான் இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT