கடலூர்

பள்ளி மாணவா்கள் இருவா் மாயம்

12th Aug 2022 10:05 PM

ADVERTISEMENT

கடலூரில் காணாமல்போன பள்ளி மாணவா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் முதுநகா் அருகே உள்ள செல்லங்குப்பத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வருண் (12). அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வியாழக்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற வருண் மாலையில் வீடு திரும்பவில்லையாம்.

இதேபோல, சுனாமி நகரைச் சோ்ந்த ரகுநாதன் மகன் கிஷோர்ராஜ் (12) என்பவரும் மேற்கூறிய பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரும் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து வருணின் தாய் கற்புக்கரசி (45) அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காணாமல்போன இரு மாணவா்களையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT