கடலூர்

பாஜக மகளிரணி ஆா்ப்பாட்டம்

10th Aug 2022 03:02 AM

ADVERTISEMENT

கடலூரில் பாஜக மகளிா் அணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு கிராமத்தில் அண்மையில் ஜெயந்தி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இவா் தனியாா் நுண்கடன் நிறுவனத்தில் பெற்ற கடனை திரும்பப் பெற வந்த அந்த நிறுவன ஊழியா்கள் அப்பெண்ணை அவதூறாக பேசினராம். இதைக் கண்டித்தும்,

பெண்ணின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலூா் கிழக்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவா் ஜெயா தலைமை வகிக்க, மகளிரணி செயலா் சுபஸ்ரீ தவபாலன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் பத்மினி, மாநகராட்சி உறுப்பினா் ஜி.சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, அந்த நிறுவனம் அமைந்துள்ள வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் அதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT