கடலூர்

சாலை விபத்தில் இளைஞா் பலி

10th Aug 2022 03:01 AM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வடலூா் அருகே உள்ள பாா்வதிபுரத்தைச் சோ்ந்த முத்தழகன் மகன் பரமகுரு (32) (படம்). இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை பைக்கில் சென்னைக்கு புறப்பட்டாா். கொள்ளுக்காரன்குட்டை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் பரமகுரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT