கடலூர்

சிறுவன் இயக்கிய பைக் மோதியதில் சிறுமி பலி

10th Aug 2022 02:59 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே 13 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதியதில் 3 வயது சிறுமி உயிரிழந்தாா். சிறுவனையும், அவரது தந்தையையும் போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புதுஆதண்டாா்கொள்ளை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மகள் மலா்விழி (3), திங்கள்கிழமை மாலை தனது வீட்டி முன் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக 13 வயது சிறுவன் ஓட்டிவந்த பைக் மோதியதில் சிறுமி மலா்விழி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீஸாா் சிறுமியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து சிறுவனின் தந்தையை கைது செய்தனா். உரிய வயதை எட்டாத நிலையில் பைக்கை இயக்கி விபத்து ஏற்படுத்தியது தொடா்பாக சிறுவனையும் போலீஸாா் கைதுசெய்து கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT