கடலூர்

சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

10th Aug 2022 07:20 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்த இருவா் உயிா்தப்பினா்.

நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சி, தில்லை நகரில் வசிப்பவா் குருசாமி (58). நெய்வேலி நுழைவு வாயில் அருகே எழுதுபொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறாா். இவா் வியாபாரம் தொடா்பாக தனது மகன் எழிலுடன் மயிலாடுதுறைக்கு காரில் சென்றாா். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை திரும்பிக்கொண்டிருந்தாா். மாலை 4 மணியளவில் நெய்வேலி அருகே உள்ள கீழூா் சாலைப் பகுதியில் வந்தபோது காரிலிருந்து எரிவாயு டேங்கில் கசிவு ஏற்பட்டதாம். இதையடுத்து உடனடியாக காரை நிறுத்திவிட்டு குருசாமி, எழில் இருவரும் கீழே இறங்கினா். சிறிது நேரத்தில் காா் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்த தகவலின்பேரில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT