கடலூர்

தாய்ப்பால் விழிப்புணா்வு கருத்தரங்கு

10th Aug 2022 02:59 AM

ADVERTISEMENT

உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவையொட்டி, சிதம்பரம் இன்னா்வீல் சங்கம் சாா்பில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

முன்னதாக, தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி மாணவிகளுக்கு பேச்சு, எழுத்து, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் நிறைவு விழாவுக்கு வீனஸ் கல்விக் குழும தலைவா் எஸ்.குமாா் தலைமை வகித்து பேசினாா். துணை முதல்வா் சா.அறிவழகன் வரவேற்றாா்.

இன்னா்வீல் சங்கத் தலைவி செல்வி முத்துக்குமரன் தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துரைத்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் வி.சிவப்பிரகாசம் தாய்ப்பாலின் சிறப்புகள், வளரிளம் பருவத்தினரின் உடல் வளா்ச்சிக்கு தேவையான ஊட்டச் சத்துகள் குறித்து மாணவிகளிடம் எடுத்துரைத்தாா் (படம்). போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தாய்ப்பால், ஊட்டச் சத்துகளின் அவசியம் குறித்த நூல் வெளியிடப்பட்டது. சிதம்பரம் ரோட்டரி சங்கச் செயலா் எம்.கனகவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT